மாவீரன், சபாஷ் சரியான போட்டி

30/05/2011 16:25

 

வெள்ளிக்கிழமைதான் தமிழ் திரையுலகினரில் பெரும்பாலானோருக்கு ராசியான நாள் போல. இந்த கிழமையில்தான் நிறைய படங்கள் திரைக்கு வருகின்றன. அதன்படி இன்றும் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அப்படங்களின் விபரங்களை பார்ப்போம். சின்னத்திரை பிரபலமான வேணு அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சபாஷ் சரியான போட்டி'. லியாகாத் அலிகான் கதை வசனம் எழுதி இருக்கிறார். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீராம், கார்த்திக், நாயகியாக அஞ்சனா தம்புராட்டி நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயராம், டெல்லி கணேஷ், வையாபுரி, வேணு அரவிந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். கனவை துரத்தும் நிஜத்தின் கதைதான் இப்படம். அதாவது புகழ் பெற்ற நடிகராக வருகிறார் ஜெயராம். அவரின் தீவிர ரசிகன்தான் கதாநாயகன். இவர்களின் ஆக்ரோஷ அன்பை முழுக்க முழுக்க காமெடியாக காட்டும் அருமையான கதை இதன் மைய இழை. தெலுங்கில் அபார வெற்றி பெற்ற 'மகதீரா' படத்தின் தமிழ் பதிப்பில் வெளியாகும் படம்தான் இந்த 'மாவீரன்'. இந்த படத்திற்கு தமிழில் கதை வசனம் எழுதி இருப்பவர் திரைக்கதை திலகமான கே.பாக்யராஜ். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜா இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சரத்பாபு, சிரஞ்சீவி ஆகியோரும் இப்படத்தில் வருகின்றனர். புனர் ஜென்மத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode