ஏர்செல்லுக்கு 2ஜி: தயாநிதி மாறனை விசாரிக்க கோரி மனு

01/06/2011 23:03

 தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆவணங்களைத் தரத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து முதலில் வழக்குத் தொடர்ந்த பொது நல அமைப்பு கூறியுள்ளது.


2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சென்னையைச் சேர்ந்த சிவா குழுமம் நடத்திவந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனின் மாக்சிஸ் குழுமம் ரூ.3,390.82 கோடிக்கு 74 விழுக்காடு பங்குகளை வாங்கியதற்குப் பிறகு 14 வட்டங்களில் செல்பேசி சேவை நடத்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார் என்றும், அதற்கு பிரதியுபகாரமாக மாக்சிஸ் குழுமம் (ஏர்செல் நிறுவனத்தின் புதிய நிர்வாகம்), தயாநிதி மாறனின் தம்பி கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.599 கோடி முதலீடு செய்துள்ளது என்றும் பொது நல வழக்கு மையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொது நல வழக்கு மையத்தின் சார்பில் வாதிட்டுவரும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் அனுமதி அளித்தால் சமர்ப்பிக்க தயார் என்று கூறியுள்ளார். 

இப்போது ஏர்செல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7.5 முதல் 8 பில்லியன் டாலர்கள் (ரூ.34,000 கோடி) என்று கூறப்படுகிறது. இப்போது இந்தியாவில் செயல்படும் 7வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக ஏர்செல் உள்ளது.

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode